பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை85

எனும் செய்யுளுமது.

(ii) நிமித்தத்தொடு சார்த்தி நற்றாய் கூறும் கிளவிக்குச்செய்யுள் :

“மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
 அன்புடை மரபினின் கிளையோ டாரப்
 பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
 பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
 வெஞ்சின விறல்வேற் காளையொடு
 அஞ்சி லோதியை வரக்கரைந் தீமே”.

(ஐங். 391)

(iii) மொழிப்பொருள் என்ற நற்சொல்லாம் விரிச்சியொடுபடுத்து நற்றாய் கூறுதற்குச் செய்யுள் :

“அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
 யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
 நாழி கொண்ட நறுவீ முல்லை
 அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது
 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்;
 சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
 னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
 ணடுங்குசுவ லசைத்த கையள், கைய
 கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
 ‘இன்னே வருகுவர் தாயர்’ என்போள்
 நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால்
 நல்ல நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
 முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
 வருதல் தலைவர் வாய்வது; நீநின்
 பருவர லெவ்வம் களைமா யோயென”.

(முல்லைப்பாட்டு வரி. 7-21)

(iv) தெய்வத்தொடுபடுத்தி நற்றாய் கூறும் கிளவி :

‘அருஞ்சுர மிறந்தஎன் பெருந்தோட் குறுமகள்’ என்னும் அகம் (195) ஆம் பாட்டில், “அறுவை தோயும்