| 86 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஒருபெருங்குடுமிச் சிறுபைஞ்ஞாற்றிய பஃறலைக் கருங்கோல் ஆகுவ, தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோ நின்கழங்கின் திட்பம், ஆறாது வருபனி கலுழும் கங்குலின் ஆனாது துயரும் என்கண் இனிது படீஇயர், எம்மனை முந்துறத் தருமோ, தம்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே” எனவரும் அடிகள் தெய்வத்தோடு படுத்து நற்றாய் கூறும் கிளவியாகும். (v) நன்மை சார்தல்: “மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல, அறநெறி இதுவெனத் தெளிந்தஎன் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே”. எனும் ஐங்குறுநூற்று (371)ச் செய்யுள் மகளின் நன்மை கருதிய தாய்கூற்றாம். (vi) உடன் போய மகளின் துன்புறு தீமை கருதித் தாய் கூறும் கிளவி : “நிழலான் றவிந்த நீரி லாரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்குவல் லுநள்கொல் தானே ஏந்திய செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த பாலும் பலவென உண்ணாள் கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே” (குறு. 356) “நீர்நசைக் கூக்கிய உயவல் யானை இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்றஎன் மகளே பந்தும் பாவையும் கழங்குமெமக் கொழித்தே (ஐங். 377). என்பதும் அது. |