| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 87 |
(vii)“அன்ன பிறவும்” என்றதால் சூத்திரத்தில் விதந்து கூறியன வல்லாத பிற பொருந்துந் துறைகளும் சுட்டப்பட்டன. தலைவியினற்றாய் தன் மகளை யுடன் கொண்டு சென்றதலைவன் தாயை வெறுத்து நொந்து கூறுவது, “அன்னபிற”வற்றுள் ஒன்றாகும். அதற்குச் செய்யுள் : “நினைத்தொறுங் கலிழும் இடும்பை எய்துக, புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும் வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே” (ஐங். 378) | (viii) | ‘முன்னியகாலம் மூன்றுடன் விளக்கிப் போகிய திறத்து’ நற்றாய் கூற்றுக்குச் செய்யுள் : | | | | | | "பிரசங் கலந்த சிறுமக ய"ள" |
எனும் போதனார் நற்றிணைப் பாட்டில், “. . . . . . . . . . . பூந்தலைச் சிறுகோல் ‘உண்’ என் றோக்குபு புடைப்ப. . . . . . . . . . . அரிகரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇ மெலிந்தொழியப் பந்த ரோடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி, அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொடுஞ்சோ றுள்ளாள்; ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே”. (நற்றிணை. 110) எனுமடிகளில், தன் மகளின் கழிந்த இளமைச் செய்தியும், அறிவொழுக்க நிகழ்காலச் செய்தியும், அவள் மனையற எதிர்கால மாட்சியும் தாய் கூறுதலறிக. (ix) தோழி தேஎத்து நற்றாய் கூற்றுக்குச் செய்யுள் : “செல்லிய முயலிற் பாஅய சிறகர் வாவ லுகுக்கு மாலையாம் புலம்பப் |