பக்கம் எண் :

88நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

  போகிய அவட்கோ நோவேன், தேமொழித்
துணையிலள் கலிழு நெஞ்சின்
இணையே ருண்கண் இவட்குநோ வதுவே”
(ஐங். 378)

(x)  கண்டோர் பாங்கில் நற்றாய் கூறுதற்கு எடுத்துக் காட்டுச் செய்யுள் :

“ஒருமக ளுடையேன் மன்னே; அவளும்
 செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
 பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்;
 இனியே, தாங்குநின் அவலமென்றிர்; அதுமற்று
 யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே?
 உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
 மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
 அணியியற் குறுமகள் ஆடிய
 மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே”

(நற்றிணை. 184)

இப் பாட்டில், ‘தாங்குநின் அவலமென்றிர், அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே’ என அறிவுடை யோராகிய கண்டோர் பாங்கில் நற்றாய் பகர்ந்த கிளவி காண்க.

(xi)  நற்றாய் தனிமையிற் கூறல் :

“இதுவென் பாவை பாவை, இதுவென்
 னலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற்
 பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
 காண்டொறுங் காண்டொறுங் கலங்க
 நீங்கின ளோஎன் பூங்க ணோளே”

(ஐங். 375)

எனும் ஐங்குறுநூற்றுச் செய்யுள், மகட் பிரிந்த தாய் ஆற்றாமையால் வருந்தும் புலம்பு சுட்டிய கிளவியாகும்.

சூத்திரம் : 36ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும்,
தாமே செல்லுந் தாயரு முளரே.