| 90 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நற்றாய் தன் முன்னிலையோரையும் உளப்படுத்திக் கூறினதால், அவர் தலைமகள் ஊரவராதலும், தன்னைப்போல் அவரையும் தலைமகள் விட்டுச் சென்றாள் எனச்சுட்டுந் தாயினுளக்குறிப்பும் தெளியப்படும். இனி, செவிலி தேடிச் செல்லுதற்குச் செய்யுள்: “காலே பரிதப் பினவே, கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே” (குறுந். 44) பாலைக்கலியில், “எறித்தரு கதிர்தாங்கி”எனும் பாட்டில், “வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை, என்மகள் ஒருத்தியும், பிறண்மகன் ஒருவனும், தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணீரோ பெரும” எனுமடிகள் சுரஞ்சென்ற செவிலியின் கூற்றாம். | சூத்திரம் : 37 | அயலோ ராயினும் அகற்சி மேற்றே. |
கருத்து : இது, மேலதற்கோர் புறனடை கூறுகிறது. பொருள் : அயலோராயினும் = உடன்போயவரைத் தேடிச் சுரஞ்செல்லுஞ் செவிலித்தாயரன்றி, தமர், ஏவலர் முதலிய பிறரேயாயினும்; அகற்சி மேற்றே = அவர்தேடுதல் அண்மைச் சேரியன்றி அகன்ற சேய்மைச்சுரத்தின்கண்ணதேயாகும். குறிப்பு : மேற் சூத்திரத்தில் சொல்லிய இரண்டனுள் தாயரே செல்லும் அண்மைச் சேரியை விலக்கிச் சேய்மைச் சுரத்திற்குத் தாயரல்லாப் பிறர் தேடிச்செல்லுதல் மரபு, ஈற்றேகாரம் தேற்றம். உம்மை, செவிலியர் போல அயலோரும் சேண்சுரம் செல்வரெனச் சுட்டலால் இறந்ததுதழீஇய எச்ச உம்மையாம். |