| 92 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
தலைவிதமர் தேடிச் சுரஞ் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு : ‘அன்றையனையவாகி’ என்னும் நற்றிணை (48)ஆம் செய்யுளில், “நீர்எமரிடை உறுதர ஒளித்த காடே” என வருவதும், நற்றிணை (362)ஆம் செய்யுளில், ‘நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே’ என்பதும் சேண் சென்று தமர் தேடுதலைக் குறிக்கும். | சூத்திரம் : 38 | | | | தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும், விடுத்தற் கண்ணும், நீக்கலின் வந்த தம்முறு விழுமமும், வாய்மையும், பொய்மையும், கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும், நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருக்கி வந்ததன் திறத்தோ டென்றிவை யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன. |
கருத்து : இச்சூத்திரம் தோழிக்குக் கூற்று நிகழுமிடம் உணர்த்துகின்றது. பொருள் : தலைவரும் விழும நிலையெடுத்துரைப்பினும் = தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவால்வரும் ஏதப்பாடுகளை எடுத்துக் கூறுதற்கண்ணும்; போக்கற்கண்ணும் = தலைமகனுடன் தலைவியை அனுப்புமிடத்தும்; விடுத்தற்கண்ணும் = உடன்கொண்டு செல்லாமல், தலைவன் தலைவியை விட்டுப் பிரியுமிடத்தும்; நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் = தலைவி தன்னையும் தமரையும் நீத்துச் செல்லுதலால் தனக்கும் தாயர் முதலிய தமருக்குமுற்ற துன்பத்தையும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய் நிலைநோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் = மெய்யையும் பொய்யையும் புனைந்து கூறியும் கண்டோரைக்காட்டியும் நற்றாயின் பருவரலைக் கருதி மறுத்தரத் தலைவியை வரவேற்றுக் கொள்ளுதலினும்; நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை = தலைவன்விடுத்தகல ஆற்றாமையால் மிக நொந்து மனங்கலங்கும் தலைவியை; அழிந்தது களையென = வருந்துதலை ஒழியென; மொழிந்தது கூறி = தலைவன் கூறியதை எடுத்துக்கூறி; வன்புறை நெருங்கிவந்ததன் திறத்தொடு = வற்புறுத்தி ஆற்றுவிக்கும் |