அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு | அலவன் - ஞெண்டு | | அல்கல் - மிகுதல் | | அல்கல் - நெருங்கல் | | அல்கல் - இரவு | | அங்கி - தங்கி | | அல்குதல் - குறைதல் | | அல்குதல் - தங்குதல் | | அல்கும் - தங்கும் | | அல்லல்அரும்படார் - நீங்குதற் கரிய அல்லலாகிய துன்பம் | | அவல் - பள்ளம் | | அழுங்க - வருந்த | | அழுங்கல் - ஒலி | | அழுந்துபடல் - மூடப்படுதல் | | அளவல் - அளவளாவுதல் | | அளியள் - இரங்கத்தக்காள் | | அளியை - இரங்கத்தக்கனை யாயினை | | அள்ளல் - சேற்றின் குழம்பு | | அறல் - கருமணல் | | அறல் - நீர் | | அறவோன் - மருத்துவன் | | அறனின்று - அறமுடையதில்லை | | அறுகாற் பறவை - வண்டு | | அறுமீன் - கார்த்திகைநாள் | | அறுவை - ஆடை | | அறை - பாறை | | அற்சிரம் - கூதிர்ப்பருவம் | | அற்சிரம் - முன்பனிக் காலம் | | ஆகம் - கொங்கை | | ஆகம் - மார்பு | | ஆகம் - மெய் | | ஆடுமழை மங்குலின் - இயங்குகின்ற மழைமேகம் போல | | ஆட்டுதல் - அலைத்தல் | | ஆமான் - காட்டுப்பசு | | ஆம் - ஈரம் | | ஆம்பல் - ஒருபண் வெண்கலத்தால் ஆம்பற்பூ வடிவமாக அணைசுபண்ணி நுனியில் வைக்கப்பட்ட புல்லாங்குழல் | | ஆயம் - தோழியர் குழாம் | |
|
|