பக்கம் எண் :


100


    
தடங்கோட் டாமான் மடங்கல் மாநிரைக் 
    
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத் 
    
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி 
    
கல்லென் சுற்றங் கைகவியாக் குறுகி 
5
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் 
    
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும் 
    
மாமலை! நாட மருட்கை யுடைத்தே 
    
செங்கோற் கொடுங்குரற் சிறுதினை வியன்புனம் 
    
கொய்பதங் குறுகுங் காலையெம் 
10
மையீர் ஓதி மாணலந் தொலைவே. 

     (சொ - ள்.) மடங்கல் மாநிரைக் குன்ற வேங்கை தடகோடு ஆமான் கன்றொடு வதிந்தென - சிங்க முதலாய விலங்கின் கூட்டம் நெருங்கிய மலையின்கணுள்ள வேங்கை மரத்தின் கீழ் வளைந்த கொம்பினையுடைய ஆமான் தன் கன்றொடு தங்கியுளதாக; துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி-அவை துயில்வதனைக் கண்ட பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி கல்லென வொலிக்கும் தன் சுற்றத்தை அவை ஒலியாவாறு தன்கையா லமர்த்திவிட்டு அருகிலே சென்று; வீங்கு சுரை ஞெமுங்க வாங்கித் தீம் பால் கல்லா வன்பறழ் கைந்நிறை பிழியும் - ஆமானின் பால் சுரந்த மடியை அழுந்தும்படி பற்றியீர்த்து இனிய பாலைக் கறந்து - தன்தொழிலையுங் கல்லாத வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியா நிற்கும்; மா மலை நாட - பெரிய மலை நாடனே !; செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன்புனம் - சிவந்த தாளையும் வளைந்த கதிரையுமுடைய சிறிய தினையின் பெரிய கொல்லை, கொய்பதம் குறுகும் காலை - முற்றுங் கதிர் கொய்யும் பதம் வந்துற்றது, வரவே, தலைமகள் மனையகம் புகுதாநிற்கும், புக்கபின் நீ அங்கே வருதற் கியலாமையின்; மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவு - எமது கரிய ஈரிய கூந்தலையுடையாளது மாட்சிமைப்பட்ட நலம் கெட்டொழியுங் கண்டாய்; மருட்கை உடைத்து - அங்ஙனம் கெடுவதை நோக்கி என்னுள்ளம் மருளுதலையுடையதாயிரா நிற்கும்; ஆதலின், நீ ஆய்ந்து ஏற்றபெற்றிப்பட ஒழுகுவாயாக ! எ - று.

     (வி - ம்.) துய் - பஞ்சு. ஞெமுங்குதல் - அழுந்துதல். இஃது அவன் புணர்வு மறுத்தல்.

     உள்ளுறை:- மந்தி கொடிய விலங்கிற்கஞ்சாது பதம்பெற்றுச் சென்று பாலைப்பிழிந்து ஊட்டிப் பறழைக் காக்குமாறு, நீயும் கொடிய