பக்கம் எண் :


126


அமைதியை எடுத்துக்காட்டியபடியாம். முன்னின்று பிரிதன் வல்லீரோ? என்றது அன்பினது அகலத்தையும் அகற்சியது அருமையையும் ஒருங்கே உணர்த்தியபடியாம்.

(71)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரையுமாற்றானே தலைவியைநோக்கி 'முன்பு யான் அன்னைக்கு அஞ்சுவேனாதலிற் பெயர்ந்து போவாயென்று கூறினும், நம்மைவிட்டு நீங்காத தலைவன் இப்பொழுது நம் ஆயம் அறியினும் என்ன ஏதம் வருமோ வென்று நடுங்குகின்றன னாதலின், நம்பால் அவன் வைத்த நட்பு இனி ஒழியுமென யானஞ்சுகின்றே'னென்று தோழி கவன்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, களனும் பொழுதும் , , , , , , ,அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் வகை என்பதனால் அமைத்துக்கொள்க.

    
பேணுப பேணார் பெரியோர் என்பது 
    
நாணுத்தக் கன்றது காணுங் காலை 
    
உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பின் 
    
நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரிது 
5
அழிதக் கன்றால் தானே கொண்கன் 
    
யான்யாய் அஞ்சுவல் எனினுந் தானே 
    
பிரிதல் சூழான் மன்னே இனியே 
    
கானல் ஆயம் அறியினும் ஆனாது 
    
அலர்வது அன்றுகொல் என்னும் அதனால் 
10
புலர்வது கொல்லவன் நட்பெனா 
    
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே. 

     (சொ - ள்.) தோழி பெரியோர் பேணுப பேணார் என்பது அது காணும் காலை நாணுத் தக்கன்று - தோழீ பெரியோர்தாம் விரும்பி ஒழுகவேண்டுவனவற்றில் அங்ஙனம் விரும்பி யொழுகாரென்று கூறுவதுதான், அதனை ஆராய்ந்து நோக்குமிடத்து எனக்கே வெட்கம் உடைத்தாயிராநின்றது; உயிர் ஓர் அன்ன செயிர்தீர் நட்பின நினக்கு யான் மறைத்தல் யாவது மிகப்பெரிது அழிதக்கன்று - உயிர் ஒன்றாயிருந்தாலொத்த குற்றமற்ற நட்பினையுடைய நினக்கு யான் மறைப்பதானது எவ்வளவு பெரிய மானக் கேடாயிராநின்றது; யான் யாய் அஞ்சுவல் எனினும் தானே பிரிதல் சூழான் மன் - முன்பு, "யான் அன்னைக்கு அஞ்சுவேனாகலின்