பக்கம் எண் :


125


    
வீழ்துணைப் பயிருங் கையறு முரல்குரல் 
10
நும்மிலள் புலம்பக் கேட்டொறும் 
    
பொம்மல் ஓதி பெருவிதுப் புறவே. 

     (சொ - ள்.) ஐய மன்னாப் பொருள் பிணி முன்னி இன்னதை வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என - ஐயனே ! நிலையில்லாத பொருளைத் தேட ஆசை பிணித்தலானே அதன்கண்ணே கருத்தைச் செலுத்தி இக்காரியத்தை வளையணிந்த முன் கையையுடைய நின் தோழிக்குக் கூறுவாயாக என்று; பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள். பலவாக மாட்சிமைப்பட இரந்து கூறுகின்றனிராதலால், யான் சென்று கூறின் நீயிர் செல்லுவீராக என்று உம்மை விடுத்தலும் செய்வாள்; விடினே - அங்ஙனம் அவள் நும்மை விடுப்பினும்; செல்வர் வகை அமர் நல் இல் அக இறை உறையும் வண்ணம் செங் கால் புறவின் சேவல் - செல்வருடைய பலகட்டுக்கள் அமைந்த வீட்டின்கண்ணே உள் இறப்பிலிருக்கும் அழகிய சிவந்த கால்களையுடைய சேவற்புறா; வீழ்துணைப் பயிரும் கையறு முரல் குரல் - தான் விரும்பிய பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் காமத்தால், செயலறவு கொண்டு ஒலிக்கின்ற அக்குரலோசையை; நும் இலள் புலம்பக் கேள் தொறும் - நும்மைப் பிரிந்து தனிமையாயிருந்து கேட்குந்தோறும்; பொம்மல் ஓதி பெருவிதுப்புற - எம் பொலிவு பெற்ற கூந்தலையுடைய தலைவி பேரவாவால் நடுங்கி வருந்துமாறு; முன் நின்று கண்ணும் நுதலும் நீவிர் பிரிதல் வல்லிரோ - அவளுக்கு முன்பு நின்று நீயிர் அவளுடைய கண்ணையும் நெற்றியையும் தைவந்து பிரிந்து போதற்கு வன்யைுடையீரோ ? உடையீராயின் சென்று சொல்லுவேன்; எ - று.

     (வி - ம்.) செல்வரக இறையுறையும் புறவு - செல்வமாந்தரால் வளர்க்கப்பட்டு அவரது உள்ளிறப்பில் விளையாட்டயரும் புறவு. பயிர்தல் - புணர்ச்சிக்கழைத்தல், பலபடிபயிர்தலால் கையற்ற முரல்குரலுமாம். விதுப்பு - ஆசையினால் வருந்துகின்ற வருத்தம்.

     இன்னே நிலையுற்ற இவளது காமவின்பத்தை இகந்து நிலையில்லாத பொருளை விரும்பிய நும்மறிவிருந்தபடிதா னென்னையென்பாள் மன்னாப் பொருட்பிணி முன்னினிரென்றாள். புறாக்கள் இடைவிடாது புல்லிப் புணருமியல்பின. அவற்றை நோக்குவார்க்குக் காமவின்பமீதூருமாதலின் அதன் பொருட்டும் புறாவளர்ப்பது மக்களுக்கியல்பு. மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) செல்வர் என்றது முன்னிலைப் புறமொழி எனினுமாம். செல்வராகிய நும் நல்லில் என்பது பொருள். மன்னாப்பொருன் என்றது பொருண்மேற் காதல் உணர்ந்தோர்க்குத் தகாது எனத் தகுதியது