பக்கம் எண் :


135


இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு அவர் அருங் குறும்பு எருக்கி அயாவுயிர்த்து ஆங்கு - மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; உய்த்தன்று மன்னே - நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள் !; எ - று.

    (வி - ம்.) குறும்பு - அரண். எருக்குதல் - அழித்தல். மன் - மிகுதி. வேரின் பகுப்புக்கடோறும் பழந்தூங்கு மென்றதூஉமாம். மலை, அம், மா -மலையமா; சாரியை. சீறூர்க்குறுமகளென இயைக்க : பல வீடுகள் சேர்ந்திருப்பது - சேரி. மடநோக்கு - உள்ளொன்றுகொள்ளாத நோக்குமாம்.

    எனவே, அரிய அரணையழித்து இளைத்ததுபோல யாமும் இவளது மனத்தி னிலையை நெகிழ்த்தி யிளைத்தனம், தலைவியின் கண்ணோக்கம் நம்மைச் செலுத்துகின்றமையான் இனி யெய்தவும் பெறுமாதலின் நீ வருந்தற்க வென்றதாயிற்று.மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.

    (பெரு - ரை.) மலையன் மாவூர்ந்து போகி . . . . .அயாவுயிர்த்தாங்கு என்றும் பாடம். இதற்குச் சேரமன்னன் மாவூர்ந்து போகி . . . . . அயாவுயிர்த்தாங்கு என்க. மலையன்-சேரன் மலையமான் திருமுடிக்காரி என்னும் வள்ளற் பெருமானுமாம். கூட்டமுண்மையைக் குறிப்பான் உணர்த்துவான், தலைவியின் ஒண்ணுதல் திதலையல்குல் குவளையுண்கண் மகிழ்மடநோக்கு என அவளுறுப்புக்களை விதந்து ஓதினன் இதன் பயன் தனக்கும் தலைவிக்கும் உண்டாய காதற்கேண்மையைக் குறிப்பாலுணர்த்துதலாம். ஆற்றாதுரைத்தல் அன்றென்க.

    இனி, இதன்கண் புறத்தே முள்ளும் அகத்தே இனிய சுனையையுமுடைய பலா நின்ற முன்றிலுடைய சீறூர் என்றது புறத்தே என்னைக்கடியும் சுற்றத்தார் சூழ்ந்திருப்பினும் என் அகத்தே உறையும் இனிய தலைவியை உடைத்து இவ்வூர் என இறைச்சிப் பொருள் தோன்றக் கூறியபடியாம் என்க.

(77)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, வரைவு மலிந்தது.

    (து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் குறித்தபருவத்து வாராமையால், தலைமகள் வருந்தியிருக்கும்பொழுது அவன் வரைவொடு வருகின்ற குறிப்பறிந்த தோழி அவளை நோக்கி நிதியுடன் அவர் வருகின்ற தேரினொலியைக் கேட்பாயாக, இது நாம் படுகின்ற துயரம் நீங்குகிற்போங்காணென உவந்து கூறாநிற்பது.