(து - ம்,) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு வரையுமாற்றானே தோழி, தலைவியை நோக்கி 'அவர் நம்மைப் புணர்ந்த சோலை இதுவே' யென்றும். 'ஆடிக் கூந்தலைத் துவட்டின துறை உதுவே' யென்றும். 'தழையுடுப்பித்துச்சென்ற கானல் அதுவே' யென்றுங் கூறியுருகிப் பசந்தனையே, இனி எவ்வாறுய்குவாயென்று வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "களனும்பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்புழி வகை என்பதன்கட் கொள்க.
| இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்ப் |
| புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப் |
| புதுவது புணர்ந்த பொழிலே உதுவே |
| பொம்மல் படுதிரை நம்மோடு ஆடிப் |
5 | புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் |
| துவரினர் அருளிய துறையே அதுவே |
| 1கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் |
| அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் |
| தமியர் சென்ற கானல் என்றாங்கு |
10 | உள்ளுதோ றுள்ளுதோ றுருகிப் |
| பைஇப் பையப் பசந்தனை பசப்பே. |