பக்கம் எண் :


168


குயிலோசை செவியளவே யின்பஞ்செய்ய, ஏனைப்புலன்க ளின்பம் பெறாமையிற் குயில்கொடி தென்றாள். யாற்றுநீர் குளிர்ச்சிசெய்தலின் அக்குளிருக்குத் தனிக்கிடை வருத்துவதேயென யாறு கொடிதென்றாள். ஆடவனது மெய் தோயப்பெற்று அம் மெய்ம்மணம் நுகர்ந்தவழி நறுமலரின் மணஞ் சிறக்குமாதலின் அது காரணமாகப் பூவிலை மடந்தை கொடியளென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) தலைவன் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவல் கவலாதேகொள் என்று தேற்றிப் போயினனாக, இடையிடையே குயிலோசை கேட்குந் தோறும் காமநோய் உரம்பெற்றுத் தன்னை வருத்துதலான், இக் குயிலின்றேல் ஒருவாறு ஆற்றியிருப்பேன்மன் என்று வருந்துவாள், என்னைப் பிரியாதே அயலிலிருந்து கூவுங்குயில் கொடி தென்றாள் யாற்றுநீர் வரவு கார்ப்பருவம் வந்துவிட்டமையையுணர்த்துதலின், அப்பருவங்கண்டு நம் பெருமான் இன்னும் வந்திலனே வருவானோ வாரானோ என்றும், இப்புதுநீர்ப் பெருக்கின்கண் அவனொடு ஆடப் பெற்றிலேனே என்றும் பல்வேறு துன்ப நினைவுகளைக் தோற்றுவித்தலான் குயிலினும் யாறு நனிகொடி தென்றாள். இனிக் கார்ப்பருவம் நிகழ்ந்து முதிராநிற்றலை அப்பருவத்தே அரும்பிமலரும் குருக்கத்தி முதலிய மலர்களை விற்போள் கூக்குரல் அறிவித்தலின் அக்குரல் கேட்டலும் எம்பெருமான் குறித்த பருவத்தே வந்திலன். நம்மை மறந்து மாறினனோ மலர் பொதுளிய இப்பருவத்தே பூம்பொழிலில் எம்பெருமான் மலர் பறித்து எங்குழலில் சூட்ட ஆடும் ஆட்டும் பெற்றிலேனே ! இனி என்செய்தாற்றுகேன் எனக் கையறுநிலை எய்துதலான் மலர் கொள்ளீரோ என வட்டியுடன் திரிதரும் உழவன் மகள் அதனினும் கொடியாள் என்றாள். இங்ஙனமாக நான் ஆற்றியிருத்தல் எங்ஙனம் என்பது குறிப்பெச்சம். அழுந்து என்பது ஆழ்ந்து என்பதன் குறுக்கல் விகாரம்.

(97)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, இரவுக்குறி வந்தொழுகுந் தலைவனைத் தோழி வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, இரவுக்குறி இடையீடின்றி வருகின்ற தலைமகனை நோக்கித் தோழி, காவன் மிகுதியையும், அதனாலே தலைமகள் துயிலாது வருந்துதலையும், அவளது நெஞ்சம் தலைவனை விட்டுப்பிரியாத அன்பினிலையையுங் கூறுவாளாய், "நாடனே ! நீ இரவில் வருதலைக் காட்டிலும் தூங்காத என் கண்ணுங் கொடிது. மீளாத என்னெஞ்சமுங் கொடியது காணென" வருந்தி வரைவுகடாதல் தோன்றக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"(தொல்-கள- 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின்  
    
செய்ய்ம்ம் மேவல் சிறுகட் பன்றி  
    
ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி