(து - ம்,) என்பது, பொருள்வயிற்சென்ற தலைவன், இடைச்சுரத்து ஆற்றானாகித் தலைவியின் உருவெளித்தோற்றம் நோக்கி "முன்பு நான் விடைபெறும் பொழுது கூந்தலை விரித்து அதனுண்மறைந்து அழிந்தேங்கித் துன்புற்று நின்ற நம் காதலியின் வருந்திய நோக்கம் இப்பெருங்காட்டினைக் கடந்தும் என்னெதிரி லெய்த வந்தனவே இஃதென்னே"யென்று அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப் |
| புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய் |
| கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் |
| பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால் |
5 | அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே |
| சேறும் மடந்தை என்றலின் தான்தன் |
| நெய்தல் உண்கண் பைதல் கூரப் |
| பின்னிருங் கூந்தல் மறையினள் பெரிதழிந்து |
| உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் |
10 | இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் |
| ஆம்பலங் குழலின் ஏங்கிக் |
| கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே. |
(சொ - ள்.) மடந்தை அருஞ் செயல் பொருள் பிணி முன்னி யாம் சேறும் என்றலின் - மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; தான்