பக்கம் எண் :


196


என்பது விதியன்று, அவர் மெல்லவும் இடைநிகராகவும் விரைந்தும் ஊதுவதே இயல்பாகலின் என்க. 'விரைவாங்கு' என்றும், 'இரத்திப் பசுங்காய் பொற்ப' என்றும் பாடவேற்றுமைகளும் உண்டு.

(113)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, ஆறுபார்த்துற்ற அச்சத்தால் தோழி, தலைவிக் குரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.

    (து - ம்,) என்பது இரவுக்குறி வந்தொழுகுந்தலைமகனை நெறியினது குற்றங்கூறி மறுத்துவரைவொடு வருமாறு கருதிய தோழி சிறைப்புறத்தானாய அவன் கேட்குமாற்றானே தலைவியை நோக்கித் "தோழீ, மழை பெய்தலின் இடி தாக்கி ஒரு களிற்றைக் கொன்றது. அதன் கோட்டினை நமர் கொணர்வதாகவும் உகிரை யடக்குவதாகவும் பேசிய ஆரவாரங்கேட்டு வருந்தியிருப்பேன்முன் நம் காதலனும் வந்தனன்; அவன் வருநெறியிற் கான்யாற்றையும் அஞ்சுகிற்பே"னென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" என்னும் விதியின்கண் (தொல். கள. 23) அமைத்துக்கொள்க. "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" என்னும் விதிகொள்ளினுமாம். இதற்குப் பயன் தலைவனுக்கு ஏதம் நிகழாமே பாதுகாத்தல். முன்னதன் பயன் வரைவுகடாதல் என இவற்றின் வேற்றுமையும் நுண்ணிதின் உணர்க.

    
வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும் 
    
பச்சூன் கெண்டி வள்ளுகிர் முணக்கவும் 
    
மறுகுதொறு புலாவஞ் சிறுகுடி அரவம் 
    
வைகிக் கேட்டுப் பையாந் திசினே 
5
அளிதோ தானே தோழி அல்கல் 
    
வந்தோன் மன்ற குன்ற நாடன் 
    
துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை 
    
பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல் 
    
ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல்லேறு 
10
பாம்புகவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி 
    
மையின் மடப்பிடி இனையக 
    
கையூன்றுபு இழிதரு களிறெறிந் தன்றே. 

    (சொ - ள்.) தோழி ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல் ஏறு பாம்பு கவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி - தோழீ! ஈரிய குரலின் மிக்க ஓசையையுடைய இடியேறு பாம்பின் அழகைக் கெடுக்கின்றதாகி உயர்ந்த மலைமேல் மோதி; மையின் மடப்பிடி