என்றதற்கு மாறாக இவள்காட்டவே. ஒருகால் "தளரினும் முடிப்பினும்" என உம்மைகொடுத்துக் கூறினார்; அவ்வண்ணங் கூறியதும் அவன் கைவிடாது காத்தற்பொருட்டேயாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஓம்படுத்துரைத்தல். இதனை இத்துறைக்கே மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 39. உரை.)
(பெரு - ரை.) கொடித் தேர் என்றும், போஒர் கிழவோன் பழையன் என்றும் பாடம். இவற்றிற்கு நிரலே, கொடியையுடைய தேர் என்றும் போர்த் தொழிலையே தனக்குரிமையாகவுடையோனாகிய பழையன் என்றும் பொருள் கூறுக.
(10)
திணை : நெய்தல்.
துறை : இது, காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
(து - ம்.) என்பது, காவல் மிகுதியாலே தலைவனைக் கூடப் பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி "நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவாரெனக் கூறுவாள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "காப்பின் மிகுதி கையற வரினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.
| பெய்யாது வைகிய கோதைபோல |
| மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப |
| உள்ளி நொதும லேர்புரை தெள்ளிதின் |
| வாரா ரென்னும் புலவி யுட்கொளல் |
5 | ஒழிக மாளநின் நெஞ்சத் தானே |
| புணரி பொருத பூமண லடைகரை |
| யாழி மருங்கின் அலவன் ஓம்பி |
| வலவன் வள்பாய்ந் தூர |
| நிலவுவிரிந் தன்றாற் கான லானே. |
(சொ - ள்.) அவர் செய்குறி பிழைப்ப - அவர் செய்த குறி இடையீடுபட்டுத் தவறுதலாலே; பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயினை - சூடாது கிடந்த பூமாலை போல நின் மெய் வாடினையாகி; நொதுமல் ஏர்பு உரை உள்ளி - அயலில் எழுதலையுடைய பழிச் சொல்லைக் கருதி; தெள்ளிதின் வாரார் என்னும்