(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே தலைமகனது குறைதீர்க்க உடன்பட்ட தோழி தலைமகளை நோக்கி, "நின்மேனி வாடவும், நெற்றியினொளி கரப்பவும் எனக்கு உரைத்தாயல்லை, நான் அவற்றின் காரணத்தை யறிவேன்" என்று கூறி என்மீது தவறேற்றி வருந்தாதே கொள்: தினைப்புனத்தில் ஒரு தோன்றல்வந்து என் முதுகை யணைத்துக் கொண்டனன், அதனை நினைந்து இங்ஙனமாயிற்றென்று, தான் கூறுவதனாலே தலைவி ஆராய்ந்து தலைவனது குறையைக் கூறவந்தாள்' என்றறியும்படி கூறாநிற்பது,
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருகத் தன்னொடும் அவளொடும் முதன்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
துறை : : (2) தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉமாம்.
(து - ம்.) என்பது தலைவி இக் களவொழுக்கத்தினைத் தமர்க்கு அறிவுறுத்தி வேற்றுவரைவுக் குடன்படாதபடி செய்யவேண்டுங் கருத்தினளாகி அதனைத் தன் தோழியிடத்துக் கூறிப் புலப்படுத்தச் செய்ததூஉமாகும்.
(இ - ம்.) இதற்கு, "விட்டுயிர்த்து அழுங்கினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
| பகலெரி சுடரின் மேனி சாயவும் |
| பாம்பூர் மதியின் நுதலொளி கரப்பவும் |
| எனக்குநீ உரையா யாயினை நினக்கியான் |
| உயிர்பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின் |
5 | அதுகண் டிசினால் யானே என்றுநனி |
| அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலிகுரல் |
| ஏனல் காதலின் இடையுற் றொருவன் |
| கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச் |
| சிறுபுறங் கவையினன் ஆக அதற்கொண்டு |
10 | அஃதே நினைந்த நெஞ்சமொடு |
| இஃதா கின்றியான் உற்ற நோயே. |
(சொ - ள்.) ஆயிழை பகல் எரி சுடரின் மேனி சாயவும் பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் நீ எனக்கு உரையாய் ஆயினை -ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து