(து - ம்,)என்பது, பொருள்தேடும்படி ஒருப்படுத்திய நெஞ்சினைத் தலைமகன் நோக்கி, "நினக்கு அருஞ்சுரம் மிக எளியவாயிருக்கும்; யான் இவளுடைய கூந்தலிலே துயிலுவதை யொழிய விடுகலேன்; ஆதலின் வேண்டுமாயின் நீயே சென்றுகா"ணென்று அழுங்கி்க் கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| இருஞ்செம் முடிய கொடுங்கவுள் கயவாய் |
| மாரி யானையின் மருங்குல் தீண்டிப் |
| பொரியாரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை |
| நீடிய சடையோடு ஆடா மேனிக் |
5 | குன்றுறை தவசியர் போலப் பலவுடன் |
| என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும் |
| அருஞ்சுரம் எளியமன் நினக்கே பருந்துபடப் |
| பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை |
| ஏந்துகோட்டு யானை இசைவெம் கிள்ளி |
10 | வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த |
| அரிசிலந் தெள்ளறல் அன்ன இவள் |
| விரியொலி கூந்தல் விட்டமை கலனே. |