(து - ம்,) என்பது, இரவுக்குறிவந்து சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு அஞ்சி விரைய வரையுமாற்றானே தோழி, தலைவியை நோக்கி "அன்னை நமது களவொழுக்கத்தை யறிந்தவள்போல "அவன் யாங்குளன்", என்று கூறாநிற்பாள்; அன்றி நீ என்னாலுங் காப்பதற்குரியை; நமது சேரியின்கண்ணே இரவில் அவருடைய தேர்மணி யோசையு மொலிக்கும்; இதற்கு யாது செய்வே'னென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| இருங்கழி பொருத ஈர வெண்மணல் |
| மாக்கொடி அடும்பின் மாயிதழ் அலரி |
| கூந்தன் மகளிர் கோதைக் கூட்டுங் |
| காமர் கொண்கன் நாமவெங் கேண்மை |
5 | அமைந்தே தில்லா ஊங்கு நம்மொடு |
| புணர்ந்தனன் போல உணரக் கூறித் |
| தான்யாங் கென்னும் அறனில் அன்னை |
| யானெழில் அறிதலும் உரியள் நீயும்நம் |
| பராரைப் புன்னைச் சேரி மெல்ல |
10 | நள்ளென் கங்குலும் வருமரோ |
| அம்ம வாழியவர் தேர்மணிக் குரலே. |
(சொ - ள்.) அம்ம வாழி - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; இருங்கழி பொருத ஈர்வெள்