| பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
5 | ஈங்கா கின்றால் தோழி பகுவாய்ப் |
| பிணவுப்புலி வழங்கும் அணங்கருங் கவலை |
| அவிரறல் ஒழுகும் விரைசெலற் கான்யாற்றுக் |
| கரையருங் குட்டந் தமியர் நீந்தி |
| விரவுமலர் பொறித்த தோளர் |
10 | இரவி்ல் வருதல் அறியா தேற்கே. |
(சொ - ள்.) தோழி பகுவாய்ப் பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை - தோழீ! பிளந்த வாயையுடைய பெண் புலி இரைதேடி இயங்குகின்ற துன்பம் நீங்குதற்கரிய கவர்த்த வழியில்; அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் கரை அருங் குட்டம் - விளங்கிய விரைந்த செலவையுடைய நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய கான்யாற்றில் ஆழமுடைய புனலின்கண்ணே; தமியர் நீந்தி விரவு மலர் பொறித்த தோளர் - தமியராய் நீந்தி அந் நீரிலே கலந்த மலர்கள் பொருந்திய தோளோடு; இரவில் வருதல் அறியாதேற்கு - நங்காதலர் இரவில் வருதலை எண்ணி அறியாமையுடையேனாகிய எனக்கு; உழுவை பெருங்களிறு தாக்கலின் இரும்பிடி கருவி மாமழையின் அரவம் அஞ்சுபு - அந் நெறியின்கண்ணே புலி பெரிய களிற்றியானையை மோதிக் கொல்லுதலால் அதனை அறிந்த கரிய பிடியானை மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையைக் கேட்டு நடுங்கி; போது ஏர் உண்கண் கலுழவும் ஏதில் பேதை நெஞ்சம் கவலை கவற்ற - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நீரை வடியவிடவும் யாதுமில்லாத பேதைமையுடைய என்னெஞ்சம் கவலையால் வருந்தவும்; ஈங்கு ஆகின்று - என்னிலைமை இவ்வண்ணமா யிராநின்றது காண்! எ - று.
(வி - ம்.)ஈங்கு - இவ்வண்ணம். அறல் - நீர். குட்டம் - ஆழம். கவற்றவும் என்பதன் உம்மை தொக்கது.
தோளின் கண்ணே தங்கிய மலரொடு வரக்கண்டமையால் யாற்றிடை நீந்திவந்தமை யறிந்து வருந்தினாள். குறிஞ்சியாதலின் பிடிமுழக்கம் அருகில் முழங்கியது அறிந்தாளாயிற்று. கவலை - ஆற்றது ஏதமஞ்சிய கவலை. இஃது அழிவில் கூட்டத் தவன்புணர்வு மறுத்தல்.
உள்ளுறை :- உழுவையாலே களிறுதாக்கப்படப் பிடி புலம்புமென்றது, ஆற்றது ஏதத்தாலே தலைவன் தாக்கப்படுவனோவெனயான் புலம்பாநின்றே னென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - வரைவுடன்படுத்தல்; அயாவுயிர்த்தலுமாம்.
(பெரு - ரை.) இனி புலி வழங்கும் கவர்ந்த வழியில் கான்யாற்றுக்குட்டம் தமியர் நீந்தி இரவில் வருதல் இதுகாறும் அறியாமல் என்