பக்கம் எண் :


248


வேறு புதுமணம் கமழாநின்றதே அஃதென்ன காரணமென்று வினாவினேன்; தகுதியான விடை கூறினாளுமல்லள்; முன்னரே அவளது இயல்பை அறிந்து வைத்தும் பாதுகாவாமையின் யானே வழுவுடையேன் ஆயினேன்மன்; எ - று.

    (வி - ம்.) ஓரை - மகளிர் பாவைகொண்டு விளையாடுவது. ஞெமிர்தல்-பரவுதல். கிளைத்தல் - விளித்தல். ஐது - வியப்புடையது.

    கூழைக்கற்றைக் குழவிப்பிராயத்திலே பூத்தந்தானைத் தொடர்ந்து 'உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்' எனக்கொண்டு இவ்விளம் பிராயத்தே சென்றமை கருதி இவள்கொண்ட காமம் வியப்புடையதென்றாள். இன்னானுடன் இவள் களவொழுக்கமுடையாளெனப் பிறர் கூறுதலைக் கேட்டலால் இன்னாவுரை யென்றாள். பூவே புனலே களிறேயென்றிவை யேதுவாகத் தலைப்பெய்து போகிய அஃது அறத்தாறாதலின் இனியவுரையென்றாள். தலைமகன் வேற்றுநிலத்து மலரைக் கொணர்ந்து முடித்தலின் நின்கதுப்புப் புதுமணம் நாறுமென்றேனென்றாள். மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

    (பெரு - ரை.) கிளைஎன - அழைத்தாற் போன்று என்க. இதன் கண் நற்றாய் "அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை கேட்டும் தன் மகள் வழுவிலள் என்று உண்மகிழ்ந்து அறியேன் போல உயிரேன்" என்பது ஆற்றவும் இன்பந்தருதல் உணர்க. ஒரு செய்தியைப்பற்றிப் பேசாதிருப்போர் "யான் அதுபற்றி மூச்சுவிடாதிருந்தேன்" என்று கூறும்உலகியலும் உணர்க. பழிதூற்றுவோர் பேசுங்கால் நலங்கூறுவார் போன்று தாம்கூறும் பழியை இனிய மொழிகளிலே கரந்துவைத்துக்கூறுவர் ஆகலின் அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை என்றாள். கேட்டற்கினியவும் பயனால் இன்னாவுடையனவும் ஆகிய உரை என்றவாறு.

(143)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, ஆற்றது ஏதத்திற்குக் கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.

    (து - ம்,) என்பது, இரவுக்குறி வாராநின்ற தலைமகன் சிறைப்புறத்தானாக அவன்கேட்டு வரையுமாற்றானே தலைவி தோழியை நோக்கி "நம் காதலர் கான்யாற்றின்கண்ணே தமியராய் நீந்திவருவதுகருதி அறியாமையேனுடைய கண்கள் கலுழவும் நெஞ்சம் கவலையால் வருந்தவும் என்நிலைமை இவ்வாறாகிய கா"ணென அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.)இதற்கு, "பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
பெருங்களிறு உழுவை தாக்கலின் இரும்பிடிக் 
    
கருவிமா மழையின் அரவம் அஞ்சுபு 
    
போதேர் உண்கண் கலுழவும் ஏதில்