பக்கம் எண் :


262


என்று இடக்கரடக்கு வகையாற் குறிப்பிட்டாள் எனக் கோடலே சிறப்பென்க. அஃதாவது எம்சேரி வந்து எம்மை மயக்கிக் கூடிப் பின் கைவிடல் நீதியோ என்று புலந்தபடியாம்.

    அன்னை இதனால் சினம் பெரிதுடையள் ஆகலின் அவன் வரின் ஒருதலையாகத் தன் கைச் சிறுகோல் கொண்டு அவனைப் புடைப்பது திண்ணம் எனவே அவன் அவ்வழிப் பிறரால் நகைக்கப்படுவன்காண் என்பது கருத்து. பாணனே அவள் நின்னையும் புடைப்பினும் புடைப்பள் என்பது தோன்ற யாய் கோல் பற்றிக் கதம் பெரிதுடையள் என்றாள். ஆதலால் நீ அவன் பொருட்டு ஈண்டு வாராதேகொள் என்பது குறிப்பெச்சம்.

(150)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

    (து - ம்,) என்பது, இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு நீட்டியாது வரைதல்வேண்டித் தோழி, தலைவியை நோக்கி 'நினது நுதல் பசந்தாலும் பெரிய தோள் நெகிழ்ச்சியுற்றாலும் மலைநாடன் நின்பொருட்டு இராப்பொழுதிலே கொடிய சாரல் நெறியில் வாராதொழிவானாக'வென்று கடிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் 
    
கொன்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் 
    
செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை 
    
கன்மிசை அருவியில் கழூஉஞ் சாரல் 
5
வாரற்க தில்ல தோழி கடுவன் 
    
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் 
    
கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த 
    
செம்முக மந்தி செல்குறி கருங்கால் 
    
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் 
10
குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிழ்ந்துதன் 
    
புன்றலைப் பாறுமயிர் திருத்துங் 
    
1குன்ற நாடன் இரவி னானே. 

    (சொ - ள்.) தோழி கறி வளர் அடுக்கத்தில் களவினின் கடுவன் புணர்ந்த செம்முக மந்தி - தோழீ ! மிளகுக் கொடி வளர்ந்து படருகின்ற மலைப்பக்கத்திலே களவுப் புணர்ச்சியிற் கடுவனால்

  
 (பாடம்) 1. 
குன்றகநாடன்.