பக்கம் எண் :


267


    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறத்தானாக ஆற்றது ஏதங்கூறி இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுத்த வேண்டித் தோழி, தலைவியை நோக்கி 'ஏடீ, இம் மழை முழக்கத்தும் புலி முழக்கத்தும் அயர்ந்து தூங்காநின்றனை போலும்; இவ்விரவு அவர் வாராதிருப்பின் நல்லதாகும்; மலைநெறியை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் அங்கே இயங்கா நின்ற' தென்று சோர்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
கானமுங் கம்மென் றன்றே வானமும் 
    
வரைகிழிப்பு அன்ன மையிருள் பரப்பிப் 
    
பல்குரல் எழிலி பாடோ வாதே 
    
மஞ்சுதவழ் இறும்பில் களிறுவலம் படுத்த 
5
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை 
    
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது 
    
துஞ்சுதி யோஇல தூவி லாட்டி 
    
பேரஞர் பொருத புகர்படு நெஞ்சம் 
    
நீரடு நெருப்பில் தணிய இன்றவர் 
10
வாரா ராயினோ நன்றே சாரல் 
    
விலங்குமலை யாராறு உள்ளுதொறும் 
    
நிலம்பரந்து ஒழுகும்என் நிறையில் நெஞ்சே. 

    (சொ - ள்.) இல தூ இல் ஆட்டி - ஏடீ! வலியிலாதாய்!; கானமும் கம் என்றன்று - காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; வானமும் வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி பல் குரல் எழிலி பாடு ஓவாது - ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம்படுத்த வெஞ்சினம் பேழ்வாய் உழுவை ஏறு - மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; அஞ்சுதக உரறும் - யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; ஓசை கேளாது துஞ்சுதியோ - இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்