(து - ம்,)என்பது, இடந்தலைப்பாடுகொண்டு கூறுமாறு சென்று தலைமகளை வினாவிய தலைமகன் தன்னெஞ்சை நோக்கி, யான் இங்கு நின்றாளை ஏடீ, நின்றோய், நின்னை வணங்கி வினாவுகின்றேம்; நீதான் ஒரு தெய்வமகளோ பிறளொரு மடந்தையோ கூறாயென வினாவியபொழுது நகைதோன்றியது, கண்பனி பரந்தனவாதலின் முயங்குங்குறிப்புடைய மக்கட்பகுதியள் காணென மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு,"மெய்தொட்டுப் பயிறல்" என்னும் நூற்பாவின்கண் வரும் "பொய்பாராட்டல்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.