(து - ம்,) என்பது, பின்னர் இளவேனிற்பருவத்து வருவேனென்று கூறிப் பொருள்வயிற்பிரிந்துபோன தலைமகன் சென்ற வினை முடிக்கு முன்னம், கூறிய பருவம் வருதலும் அதனையறிந்து தன்னெஞ்சினை 'நெஞ்சமே, இளவேனில் நாளிலே குயில் கூவும் பொழுதெல்லாம் அவ்வோசையை நம் காதலி கேட்டுக்கேட்டு மாறாது கலுழாநிற்குமே' யென் றழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப் |
| பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப் |
| பல்பொறி அரவின் செல்புறங் கடுப்ப |
| யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில் |
5 | இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் |
| நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக் |