பக்கம் எண் :


275


கொல்லும் - மிக்க இருள் வடிவமாய் நின்று இதுதான் அவன் வருகின்ற இருட்பொழுதென்று என் கண்களைக் கொல்லா நிற்கும்; இத்தகைய காட்டின்கண் இருட்பொழுதில் அவன் வருவதனைக் குறித்து யான் யாது செய்யமாட்டுவேன் ? எ - று.

    (வி - ம்.) கனை - மிகுதி. கயவாய் - பெரிய வாய்.

    நெறியும் அதிலுள்ள காடும் தன்னைக் கொல்லாநிற்குமென்றது அத்தகைய கொடிய நெறியின்கணுள்ள காட்டில் வரற்பாலனல்லனென இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுத்தியதாயிற்று. இஃது அவன் புணர்வு மறுத்தல்.

    உள்ளுறை :- புலி வேழத்தின் குருதிபருகி வேங்கமைரத்திலே சென்று துடைக்குமென்றது, ஊராரெடுக்கும் அலரானது என்னை வருத்தி அன்னைகாதினுஞ் சென்றுவிட்டதென்பதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - இரவுக்குறிமறுத்து வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'கல் அதர் மன்னும் கால் கொல்லும்' என்றும் பாடம். இப் பாடமே சிறந்தது. நாடன் வரூஉம் ஆறு யான் காணேன் ஆயினும் அஃது என் புறக்கண்ணிற்குக் கரந்து அகக்கண்ணிற்குத் தோன்றிக் கல்லதராய்க் கால்கொல்லும்; கனையிருளாய்க் கண்கொல்லும் என்றாள் என்க. எனவே அவன் வரும் நெறியின் ஏதநினைந்து யான் பெரிதும் வருந்துகின்றேன் என்றாளாயிற்று மன்னும் உம்மும் அசைகள். புலி . . . . . . துடைக்கும் என்றது - வெளிப்படையில் நெறியின் ஏதம் கூறியவாறுமாயிற்று.

(158)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, தலைவியின் ஆற்றாமையும் உலகியலுங் கூறி வரைவு கடாயது.

    (து - ம்,) என்பது, பகற்குறிவந்தொழுகுந் தலைமகனைத் தோழி வரைவுகடாவுவாளாய், 'யாம் பகற்பொழுதினை இங்குப்போக்கி மாலையிலே பாக்கம் போகுவமாயின் ஆங்கு வருவதற்குத் தலைவி வருந்தாநிற்கு'மென அவளது ஆற்றாமையும், 'யாமும் வருதியென்றழைக்கும் வலியிலேமாதலின் நினது தேர் எம் பாக்கத்தார் மகிழ்ந்து கொண்டாடும்படி ஆங்குவந்து தங்குவதாக' என்று தலைவன் தங்கும் வழி எதிர்கொண்டு தமர் வருவிருந்தயர்வதாகிய உலகியலுந் தெளியக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.

    
மணிதுணிந்து அன்ன மாயிரும் பரப்பின் 
    
உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை 
    
நிலவுக்குவித்து அன்ன மோட்டுமணல் இடிகரைக்