பக்கம் எண் :


279


    நீ கண்டிலை, கண்டாயாயின் நின்னிலையும் இங்ஙனமேயாம் என்பது குறிப்பென்க. கம்மென உடையேன் என மாறி அமைதியாக உடையேன் என்க. கம்மென என்றது அமைதிக் குறிப்பு. "நும்மினும் அறிகுவன்" என்றும் பாடம்.

(160)
  
    திணை : முல்லை.

    துறை : இது, வினைமுற்றிப் பெயருந் தலைவன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

    (து - ம்,) என்பது, போர்முடித்துமீளுந் தலைவன் தான் கூறுவதனைத் தேர்ப்பாகன் கேட்டு விரையத் தேர்செலுத்தியதன்பொருட்டு மகிழவேண்டி அவனை நோக்கி நமது வருகையைக் காக்கைப்புள்ளினம் கரைந்து தெரிவித்தனவோ நம் காதலி மகிழ்தற்குக் காரணந்தான் யாதென உவந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய 
    
கண்போல் நீலம் சுனைதொறும் மலர 
    
1வீதா வேங்கைய வியனெடும் புறவின் 
    
இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய 
5
நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி 
    
இளையர் ஏகுவனர் பரிப்ப வளையெனக் 
    
காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத் 
    
தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப் 
    
புள்ளறி வுறீஇயின கொல்லோ தெள்ளிதின் 
10
காதல் கெழுமிய நலத்தள் ஏதில் 
    
புதல்வற் காட்டிப் பொய்க்குந் 
    
திதலை யல்குல் தேமொழி யாட்கே. 

    (சொ - ள்.) இறையும் அருந்தொழில் முடித்தென - நம்முடைய அரசனுஞ் செய்தற்கரிய போர்த் தொழிலை முற்றுவித்ததனாலே; பொறைய கண்போல் நீலம் சுனைதொறும் மலர - மலையிலுள்ள சுனைகள் தோறும் மாதர்கண்போலும் குவளைமலரா நிற்ப; வீதா வேங்கைய வியன் நெடும் புறவின் - மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கை மரங்களையுடைய அகன்ற நெடிய காட்டின் கண்ணே; இம் என் பறவை ஈண்டு கிளை இரிய - இம்மென ஒலிக்கின்ற வண்டுகளின் நெருங்கிய கூட்டம் இரிந்தோடாநிற்ப; நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி இளையர் ஏகுவனர்

  
 (பாடம்) 1. 
வீததர்.