(து - ம்.) என்பது, தலைமகன் வரைந்துகொள்ளும் வண்ணம் வருகின்றதனை யறிந்த தோழி, கழிபேருவகையளாய்த் தலைவியை நெருங்கி 'நம் துறைவனுடைய குதிரைகள் நாள்தோறும் வந்துவந்தலைதலால் அவற்றை நோக்கி என்னெஞ்சம் வருந்தாநிற்கும்: அது கழிந்தது; இனி மணம்புரிதல் காரணமாக அவற்றுக்குத் துன்பமின்மையால் அவை இளைப்பொழிவனவாக'வென்று மாவின் மேல்வைத்து மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப்பட" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| உயிர்த்தன வாகுக அளிய நாளும் |
| அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு |
| எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் |
| கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப |
5 | நிலவுத்தவழ் மணற்கோடு ஏறி்ச்செல்வர |
| இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி |
| வருந்துமன் அளிய தாமே பெருங்கடல் |
| நீல்நிறப் புன்னைத் தமியொள் கைதை |