(து - ம்.) என்பது. சென்று வினைமுடித்து மீளுந்தலைவன் நெஞ்சை நெருங்கி 'யாம் பிரிந்ததனாலுண்டாகிய தலைவியினது துன்பந் தீரும் வண்ணம் இப்பொழுது நாம் வருவதனை நம்முடைய மாளிகையின் சுவரின்கண்ணுள்ள பல்லி, பலபடியாக இயம்பி அறிவுறுத்தா நிற்குமோ'வெனக் கருதிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும், அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல் |
| வருவம் என்னும் பருவரல் தீரப் |
| படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி |
| பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி |
5 | மீமிசைக் கலித்த வீநறு முல்லை |
| ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும் |
| வன்கை இடையன் எல்லிப் பரீஇ |