(து - ம்.) என்பது, அன்னை வெறியெடுக்கின்றாளென்று தலைமகனுக்கு அறிவுறுத்தி அவனை வரைந்தெய்துமாறு உடன்படுத்த வேண்டிச் சிறைப்புறமாக வந்த அவன் கேட்குமாற்றானே தோழி தலைவியை நோக்கி "வெறி அயருங்களத்து வருகின்ற முருகவேள் "என்னாலெய்தியதன்று, ஒரு தோன்றலாலெய்தியது இந்நோய்' என்று அன்னைபால்