பக்கம் எண் :


300


முன்னிலையானுங் கனவானும் அறிவுறுத்தின் அதனால் அவள் ஏதேனும் ஏதமெய்துமோ வென" நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு முற்செய்யுட்குக் கூறிய விதியே கொள்க.

துறை : (2) வெறியச்சுறீஇத் தோழி அறத்தொடுநிலை பயப்பித்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, அன்னை வெறியெடுக்கின்றாளெனத் தோழி தலைவியை அஞ்சுவித்து வெறியயருங்களத்தின்கண் அறத்தொடு நிற்குமாறு கூறியதுவும் ஆகும். (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

    (இ - ம்.) இதனை, "நாற்றமும்" என்னும் நூற்பாவின்கண் 'களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் . . . . .பிறவும் (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
சுனைப்பூக் குற்றும் தொடலை தைஇயும் 
    
மலைச்செங் காந்தள் கண்ணி தந்தும் 
    
தன்வழிப் படூஉம் நம்நயந்து அருளி 
    
வெறியென உணர்ந்த அரிய அன்னையைக் 
5
கண்ணினுங் கனவினுங் காட்டி இந்நோய் 
    
என்னினும் வாராது மணியின் தோன்றும் 
    
அம்மலை கிழவோன் செய்தனன் இதுவெனின்  
    
படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின் 
    
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ 
10
தொடியோய் கூறுமதி வினவுவல் யானே. 

    (சொ - ள்.) தொடியோய் யான் வினவுவல் - தொடியினையுடையாய் யான் நின்னையொரு செயலை வினவுகின்றேன்; சுனைப்பூ குற்றும் தொடலை தைஇயும் மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும் - அதுதான் யாதெனிலோ?; கேள்! சுனையின்கணுள்ள மலர் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலுள்ள செங்காந்தள் மலர்கொய்து அம்முருகவேள் போர்க்குச் சூடும் கண்ணியாக அமைத்தும் சார்த்தி; தன் வழிபடூஉம் நம் நயந்து அருளி - அவனை வழிபாடுசெய்கின்ற நம்மை ஆதரஞ் செய்யுமாறு விரும்பியருளி்; வெறி என உணர்ந்த அரிய அன்னையை - நாம் இப்பொழுது கொண்டிருக்கிற காமநோய் 'முருகு அணங்கியது காரணமாக வந்த இவள் மேனியின் வேறுபாடுதான் வெறியயர்ந்தால் நீங்கும்' என மாறாக நினைந்துடைய அம் மாறுபாடு எவ்வழியினாலும் நீங்கரிய நம் அன்னைக்கு; கண்ணினுங் கனவினும் காட்டி -கண்ணாலே குறிப்பாகக் காட்டுவதனோடு உறங்கும்பொழுது அவளது கனவின்கண்ணும் வந்து தோன்றித் தன்வடிவு புலப்படக்காட்டி; இந் நோய் என்னினும் வாராது - இக் காமநோய் என்னாலும்