| கற்றை ஈந்தின் முற்றுக்குலை யன்ன |
| ஆளில் அத்தத் தாளம் போந்தைக் |
| கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பிற் |
| புலியெதிர் வழங்கும் வளிவழங்கு ஆரிடைச் |
5 | சென்ற காதலர் வந்தினிது முயங்கிப் |
| பிரியாது ஒருவழி உறையினும் பெரிதழிந்து |
| உயங்கினை மடந்தை என்றி தோழி |
| அற்றும் ஆகுமஃது அறியா தோர்க்கே |
| வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
10 | மல்லல் மார்பு மடுத்தனன் |
| புல்லுமற் றெவனோ அன்பிலங் கடையே. |