(பெரு - ரை.) கற்றை ஈந்தின் என்பது தொடங்கி . . . . .. உயங்கினை என்னுந் துணையும் தோழி கூற்றைத் தலைவிகொண்டு கூறினபடியாம். அவனுடைய வீழாக்கொள்கைகள் அணைத்து வீழ்ந்தன; இப்பொழுது அவன் மல்லல் மார்பு கொண்டு மடுத்தனன் எனப் பொருள் கோடலுமாம்.
(174)
175. . . . . . . . . . . . . . .
திணை : நெய்தல்.
துறை : இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
(து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்திருந்த தலைமகன் கேட்டு இனி இல்வயிற் செறிக்கப்படுமாதலால், களவுப்புணர்ச்சிக் கியலாதென்று வரைந்தெய்துமாறு தோழி தலைவியை நோக்கி 'நம் தலைவனுடன் கூட்டம் நிகழ்ந்ததனை அன்னை அறியாதிருந்தும் ஏதிலாட்டியர் கூறுதலால் என்னைச் சுடுவதுபோல நோக்குவளெனவும் இதுபற்றி உள்ளுறையால் இறைமகன் இன்னது செய்தல் வேண்டுமெனவுஞ் சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| நெடுங்கடல் அளித்த கொடுந்திமில் பரதவர் |
| கொழுமீன் கொள்கை அழிமணல் குவைஇ |
| மீன்நெய் அட்டிக் கிளிஞ்சல் பொத்திய |
| சிறுதீ விளக்கின் துஞ்சும் நறுமலர்ப் |
5 | புன்னை ஓங்கிய துறைவனோடு அன்னை |
| தானறிந் தன்றோ இலளே பானாள் |