பக்கம் எண் :


305


176. ....................
திணை : குறிஞ்சி.

துறை : இது, பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது உணர்த்தவுணரும் ஊடற்பகுதிக்கண்ணதாகிய தலைவி தான் பூப்பு நீராடிய துணர்த்தவேண்டித் தன் தோழியைச் செங்கோலஞ்செய்துவிடுப்ப அதுகண்டு உலகியல் நோக்கித் தலைவனை விடுத்த பரத்தை யாம் தலைவியை அஞ்சி விடுத்தே மென்று ஊரார் கூறுவர் போலுமென்று உட்கொண்டு எதிர்வந்து உரையாடுதலை யஞ்சித் தான் கூறுவதனைத் தலைவியும் பாங்கியும் அறிந்துகோடற் பொருட்டு, அப் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியாகிய விறலியை நோக்கி, "அவள் நம்மை நயந்து கொண்டிருக்கையில் நாம் அவளை நயந்துகொள்ள வேண்டி அவனை விடுத்தோம் என ஊரார் புகலுவர்கொல்"லெனக் கூறுவதுடன் உள்ளுறையால் "யாம் அவனை மீட்டுக் கைக்கொள்வா"மெனவும் வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.

    
எம்நயந்து உறைவி ஆயின் யாம்நயந்து 
    
நல்கினம் விட்டதென் நலத்தோன் அவ்வயின் 
    
சால்பின் அளித்தல் அறியாது அவட்கவள் 
    
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி 
5
நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப் 
    
போதுபொதி உடைந்த ஒண்செங் காந்தள் 
    
வாழையஞ் சிலம்பின் வம்புபடக் குவைஇ 
    
யாழோர்த் தன்ன இன்குரல் இனவண்டு 
    
அருவி முழவின் பாடொடு ஒராங்கு 
10
மெல்மெல இசைக்கும் சாரல் 
    
குன்ற வேலித்தம் உறைவின் ஊரே. 

    (சொ - ள்.) தோழி! எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து நல்கினம் விட்டது என் - விறலீ! தலைமகளானவள் எம்மை விரும்பி உறைபவளாயிருக்கையில் யாமாக அவளை விரும்பி அவள் விரும்பியவாறு நல்கிவிட்டதுதான் என்னவிருக்கின்றது?; நலத்தோன் அவ்வயின் சால்பின் அளித்தல் அறியாது - நம் நலத்திற்குக் காரணமாயிருக்கும் தலைமகனை அத் தலைவி பால் யாம் சால்பினாலே கொடுத்தது அறியாது; நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் போது பொதி உடைந்த ஒள் செங்காந்தள் - நிரைத்திருக்கின்ற யானையின் முகத்திலுள்ள கோடு