பக்கம் எண் :


31


     (பெரு - ரை.) செல்லினும் செல்லாயாயினும் என்றும், செகுத்தனென், என்றும் பாடம். யாம் பிரியின் இவள் பிரிவாற்றாமையான் இறந்துபடுதல் ஒருதலை என்பது தோன்றப் பொருள் வயிற்பிரியில் புணர்வு புணராது என்றான்.

(16)
  
    திணை: குறிஞ்சி.

    துறை : இது, முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, வரையாது பகற்குறிக்கண் வந்தொழுகுந் தலைமகன் ஒரு பொழுது வாராதிருத்தலாலே வருத்தமுற்ற தலைவி பின்பொருநாள் வந்து ஒரு மறைவிடத்திற் கேட்டிருந்த தலைமகன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டித் தோழியை நோக்கி யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதுகொண்டிருக்கும்போது வினாவிய அன்னைக்கு, மறந்து தலைவனது மார்பைப் பெறாமல் வருந்துகின்றேனென இம் மறையினைச் சொல்லத் தொடங்கித் தவிர்ந்தேனென்று கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்குக் "களவு அறிவுறினும்" (தொல்-கள- 20) என்னும் விதி கொள்க

    
நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து  
    
மால்கடற் றிரையி னிழிதரு மருவி 
    
அகலிருங் கானத் 1 தல்கணி நோக்கித் 
    
தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல்  
5
பேந்தெழின் மழைக்கண் கலுழ்தலின் அன்னை 
    
எவன்செய் தனையோநின் னிலங்கெயி றுண்கென  
    
மெல்லிய இனிய கூறலின் வல்விரைந் 
    
துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் 
    
2 துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற்  
10
காந்த ளூதிய மணிநிறத் தும்பி 
    
தீந்தொடை நரம்பின்3 முரலும் 
    
வான்றோய் வெற்பன் மார்வணங் கெனவே. 

    (சொ - ள்.) தோழி நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து - தோழீ ! விடியற்காலையில் மழைபெய்துவிட்ட நல்ல நெடிய மலையினின்று; மால் கடல் திரையின் இழிதரும் அருவி - கரிய கடலின் அலைபோல இழிகின்ற அருவி; அகல் இருங்கானத்து அல்கு அணிநோக்கி - அகன்ற பெரிய காட்டினிடத்துச்

  
 (பாடம்)1. 
அகலணி.
 2. 
உரைத்தல். 
 3. 
இமிரும்.