பக்கம் எண் :


310


179. .......................................................
திணை : பாலை.

துறை : இது, மனை மருட்சி.

    (து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளை வைகிருளிலே கொண்டு தலைக்கழிந்ததனைச் செவிலியாலறிந்த நற்றாய், அஃது அறநெறியேயென நினைந்தும் அவளது இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்குகின்றாள். "என்னொரு மகள் பாலூட்டவும் உண்ணாது அழுபவளாய் நேற்றும் அத்தன்மையளாயிருந்தவள், இன்று ஒருவன் பின் சுரநெறியிலே சென்றனளென்பதை எவ்வாறு ஆற்றுவே"னென நொந்துகூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""தன்னும் அவனும் ....................... நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய"" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.

    
இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றெனப் 
    
பந்துநிலத்து எறிந்து பாவை நீக்கி 
    
அவ்வயிறு அலைத்தஎன் செய்வினைக் குறுமகள் 
    
மானமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு 
5
யானுந் தாயும் மடுப்பத் தேனொடு 
    
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி 
    
நெருநலும் அனையள் மன்னே இன்றே 
    
மையணற் காளை பொய்புக லாக 
    
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன் 
10
முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே. 

    (சொ - ள்.) இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என - மனை யகத்து முளைத்துப் படர்ந்த வயலைக் கொடியை ஆங்குக் கன்றையீன்ற பசுவானது சென்று தின்றதினாலே; பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி அ வயிறு அலைத்த என் செய்வினைக் குறுமகள் - அதுகண்டவுடன் தான் விளையாட்டயர்ந்துகொண்டிருந்த பந்தை நிலத்தெறிந்து போகட்டு ஒரையாடும் பாவையையும் அவ்வயின் வைத்துத் தனது அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட செய்யுங் காரியங்கள் வல்ல என் இளம்புதல்வி; மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு - மானின்பொருந்திய நோக்கம்போன்ற மையலைச் செய்யும் பார்வையுடனே; யானும் தாயும் மடுப்பத் தேனொடு தீம் பால் உண்ணாள் - யானுஞ் செவிலித்தாயும் தேனொடு கலந்த இனிய பாலையருந்துகவென்று ஊட்டவும் உண்ணாது; வீங்குவனள் விம்மி நெருநலும் அனையள் மன் - விம்மி அழுபவளாகி நேற்றும் அத் தன்மையளாயிருந்தனள். அங்ஙனம் செய்வதெல்லாம் கழிந்தது; இன்று மை அணல் காளை பொய் புகல்