(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை எதிரேற்று முகமன் வழங்கிய தோழி, தலைமகளிடஞ் சென்று கூறுதலும் அவள் சினமிகுந்து உடன்படாமையால் உள்ளங்கலங்கி "ஊரன் பரத்தையர் பால் நசையுடையனாகி இல்வயின் வருகின்றிலன்; வரினுந் தலைவி தான் புலவிநீங்குவாளல்லள்; இவ்விருவருடைய பகையும் யான் இறந்தொழியின் அன்றே தீர்ந்துவிடும் போலு"மென நொந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, ""அடங்கா வொழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை |
| கழனி நாரை உரைத்தலிற் செந்நெல் |
| விரவுவெள் ளரிசியின் தாஅம் ஊரன் |