பக்கம் எண் :


313


போலுமென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவி ஊடல் தீர்தல்.

    (பெரு - ரை.) திதியன் என்னும் அரசனுடைய காவல்மரமாகிய புன்னையை அன்னி என்னும் வேந்தன் வெட்டியழித்தமையை ""பெருஞ்சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப்பண்ணிய நன்னர் மெல்லிணர்ப்புன்னை போல"" (145-10-3) என வரும் அகநானூற்றுப் பகுதியாலும் உணர்க.

(180)
  
181. ....................................
திணை : முல்லை.

துறை : இது, வினைமுற்றிப் புகுந்ததுகண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.

    (து - ம்.) என்பது, தலைவன் வினைமுடித்துவரக்கண்ட தோழி மகிழ்ந்து "மாலைப் பொழுதிலே தலைவனது தேர்வந்ததாதலின,் இனிப் பசலையால் இவளது நெற்றியினழகு கெடாதிருக்கு" மெனவும,் உள்ளுறையால் முன்பு பரத்தையிற் பிரிந்த தலைவனை வெறுத்தாற்போல வெறாது எதிர்கொள்ளற்பாலள் எனவும் உவந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, ""பெறற்கரும் பெரும்பொருள்"" (தொல். கற். 9) என்னும் நுாற்பாவின்கண் வரும் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக்கொள்க.

    
உள்ளிறைப் குரீஇக் காரணல் சேவல் 
    
பிறபுலத் துணையோடு உறைபுலத் தல்கி 
    
வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை 
    
நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன 
5
சிறுபல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் 
    
துவலையின் நனைந்த புறத்த தயலது  
    
கூர லிருக்கை அருளி நெடிதுநினைந்து 
    
ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக் 
    
கையற வந்த மையல் மாலை 
10
இரீஇய வாகலின் இன்னொலி யிழந்த 
    
தாரணி புரவி தண்பயிர் துமிப்ப 
    
வந்தன்று பெருவிறல் தேரே 
    
உய்ந்தன் றாகுமிவள் ஆய்நுதற் கவினே. 

    (சொ - ள்.) உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல் - மனையகத்துக் கூரையினுள்ளே உறைகின்ற கரிய தாழ்வாயையுடைய குருவியின் சேவல்; பிற புலத் துணையோடு உறைபுலத்து அல்கிவந்ததன் - வேற்றுப்புலத்துச்சென்று ஆண்டுள்ள