(து - ம்.) என்பது, வரைதல் காரணமாகப் பொருளீட்டி வருமாறு பிரிதலுறுந் தலைமகனைத் தோழி பிரிதலால் வருகின்ற துன்பம் இன்ன தன்மைய தென்பாள் "உமணர் பிரிதலாலே இன்மையுண்டா தல்போல், நீ பிரிதலால் இன்னாமை தோன்றும்: அவ்வின்னாமை தோன்றுமாறு ஊதையொடு மாலையுந் தோன்றுதலுடையதாயிராநின்றது; இவ்வளவிலே பிரியின் அவள் வாழாள்; அதனை நினையாதோய், நீ அறியாமையுடையை"யென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்"" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் பாங்கின் என்பதனால் அமைத்துக் கொள்க.
| தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து |
| பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி |