பக்கம் எண் :


315


182. ..................................................
திணை : குறிஞ்சி.

துறை : இது, வரைவுநீட்டிப்பத் தலைமகளாற்றாமையறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவுகடாயது

    (து - ம்.) என்பது, தலைவன் மணம்புரிந்துகொள்ள நீட்டித்ததனாலே தலைவி வருந்துவதறிந்த தோழி; இரவுக்குறிக்கட் சிறைப்புறமான தலைமகன் கேட்டு விரைவில் வரையுமாறு "தலைவியை நிலவு மறைந்தது, இருளுமூடியது, அன்னையுந் துயிலுவள், இப்பொழுது குறிவயின் வந்து நின்ற தலைவனது நிலைகண்டு அவன்மார்பை முயங்கிவருவேமோ சொல்லுவா"யென்று கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.

    
நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
    
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 
    
பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
    
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 
5
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
    
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
    
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
    
கீழும் மேலும் காப்போர் நீத்த 
    
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
10
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

    (சொ - ள்.) தோழி நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று - தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது; ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் பாவை அன்ன நம் புறம் காக்கும் - சித்திரத்திலமைந்தாலொத்த அகன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையிலே பாவைபோன்ற நம்மைப் பாதுகாக்கின்ற; சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள் - சிறந்த மேம்பாட்டினையுடைய அன்னையுந் துயிலா நின்றனள்; கீழும் மேலும் காப்போர் நீத்த வறுந்தலை பெருங்களிறு போல - தறியிலே பிணித்துக் காப்பவரும் மீதேறி நடத்துபவரு மொழிந்த சிறிய தலையையுடைய பெரிய களிற்றுயானைபோல; தமியன் வந்தோன் பனி அலை நிலை சென்மோ - தனியாக வந்த தலைவனது பனியலைத்தலானே கலக்குண்ட நிலையைச் சென்று நோக்கி; கெடுத்துப்படு நல் கலம் எடுத்துகொண்டு ஆங்கு - கையிலிருந்து தவறுண்டு விழுந்து இழந்து