(து - ம்.) என்பது சேட்படை முன்பு கூறினமையானே பொருள் வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்).
(இ - ம்.) இதனை ""தண்டாது இரப்பினும்"" (தொல். கள. 11)என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக் |
| காமங் கைம்மிகக் கையறு துயரங் |
| காணவு நல்கா யாயிற் பாணர் |
| பரிசில் பெற்ற விரியுளை நன்மான் |
5 | கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி |
| இரவலர் மெலியாது ஏறும் பொறையன் |
| உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின் |
| அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து |
| பறவை இழைத்த பல்கண் இறாஅல் |
10 | தேனுடை நெடுவரைத் தெய்வம் எழுதிய |
| வினைமாண் பாவை அன்னோள் |
| கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே. |
(சொ - ள்.) பாணர் பரிசில் பெற்ற விரி உளை நல் மான் - பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின்; கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறுநெறி - கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய நெறியின்கண்ணே; மெலியாது இரவலர் ஏறும் பொறையன் - மெலியாமல் இரவலர் ஏறுகின்ற பொறையனது; உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின் - புகழமைந்த கொல்லி மலையின் மேல்பால்; அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப்பாய்ந்து பறவை இழைத்த பல் கண் இறாஅல் - அகன்ற இலையையுடைய காந்தளின் அசையும் பூங்குயிலே பாய்ந்து தேனை நுகர்ந்து வந்து வண்டுகளால் வைக்கப்பட்ட பலவாய கண்களையுடைய இறாலின்கண்; தேன் உடை நெடுவரை - மிக்க தேனையுடைய நெடிய அம் மலையிலே; தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் - தெய்வத்தாற் செய்துவைத்தலிற் செயற்கை மாட்சிமைப்பட்ட பாவை போன்ற அவள்தான்; கொலை சூழ்ந்தனள் -