பக்கம் எண் :


325


படுதல். யாங்கு - எப்படி. அறிகிலேன்: சொல்லெச்சம். இது துன்பத்துப் புலம்பல்.

    வரும்பொழுது எதிர்தொழுது போம்பொழுது புறந்தொழுதல் கற்புடை மகளிர்க் கியல்பாதலின் கையறவு தோன்றாதபடி கற்பின்றலைமைக் கேற்பத் தொழுதமை கூறினாள். காதலனொடு உறையாத விடத்து ஊரும் அவனுடன் முயங்கிக்கிடவாத விடத்துச் சோலையும் பொலிவழிந்து வெறுப்பாகத் தோன்றுதலின் அவற்றைக் காணுந்தோறும் யாங்காவது கொலெனத் தானுய்யாமை கூறி யிரங்கினாளென்பது. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல். கேட்போர் - நெஞ்சம்.

    (பெரு - ரை.) இனி இச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார் தோழி கூற்றாகக் கொண்டு ""நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்"" (தொல். கள. 23) என்னும் துறைக்கு எடுத்துக் காட்டுவர். கல் சேர் மண்டிலம் சிவப்ப நிலம் வெப்பந்தணிய எனலுமாம்.

(187)
    திணை : குறிஞ்சி.

     துறை : இது, பகற்குறிமறுத்து வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் பகற்குறி வந்தொழுகுகின்றானைத் தோழி நோக்கி "வெற்பனே! எங்கள் தலைவி" முதற்கூட்டத்துக் கண்ணே களவொழுக்கம் தீதென நன்றாக அறிந்துவைத்துளளெனின்; நீ வரைதலுஞ்செய்யாது இப்பொழுது அருகியும் வருதல் காரணமாக வாடுநளல்லள்; அது கழிந்தது, இனி மொழிந்து யாது பய"னென மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும்.............................................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23)என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
    
படுநீர்ச் சிலம்பின் கலித்த வாழைக் 
    
கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை 
    
ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம் 
    
மெல்விரல் மோசை போலக் காந்தள் 
5
வள்ளிதழ் தோயும் வான்தோய் வெற்ப 
    
நன்றி விளைவுந் தீதொடு வருமென 
    
அன்றுநன் கறிந்தனள் ஆயிற் குன்றத்துத் 
    
தேமுதிர் சிலம்பில் தடைஇய 
    
வேய்மருள் பணைத்தோள் அழியலள் மன்னே.