பக்கம் எண் :


342


அவர் நல் மலை நாட்டுத் தவழும் - அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்; எ - று.

     (வி - ம்.) வீழ்ந்தகால், காலிறங்குதல்; அஃதாவது மழைபெய்ய இறங்கும் நீர்வீழ்ச்சி. தோள்கொடி நெகிழ்தனவென்றது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது, கதுப்பு - கூந்தல். தோல் - கடுகு; கடுகு, கேடயம் எனவும் வழங்கப்படுவது. தேயர் - தேயும் பொருட்டு.

     போர்முகத்துப் பயின்றவராதலின், அவரை மழை பகைபோல முற்றுதல் நோக்கி அது நின்னையும் வருத்துமன்றோவெனக் கருதி இன்னே வருவர் என்னுங் குறிப்பால் மழையைக் கிடுகுபோலவென உவமித்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) "தோளே....................................அன்னோ;" என்னுந் துணையும் தோழி தலைவியின் கூற்றைக்கொண்டு கூறினாள். இனி இச் செய்யுளைக் கற்புக்காலத்தே தலைவன் கார்காலத் தொடக்கத்தே வருகுவல் என்று சென்றானாகத் தலைவி வந்திலன் என வருந்துவாட்குத் தோழி கார்ப்பருவ வரவு காட்டி இன்னே வருகுவர் அழாதேகொள்! என்று ஆற்றுவித்ததாகக் கொள்ளினும் இழுக்கின்று. மன்னர் எயில் ஊர் பல்தோல் போல என்பதற்கு மன்னர் பகைவருடைய மதில் வளைத்தற்குச் செலுத்தும் பலவாகிய யானைகளைப்போல எனக் கோடலுமாம்.

(197)
  
     திணை : பாலை.

     துறை : இது, பின் சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிந்த வழி பின்னே தேடிச் சென்ற செவிலி ஒரு தலைவனுந் தலைவியுமாக எதிரே வருவாரைத் தன்மகளும் மருமகனுமாமென மயங்கி அருகில் வருதலும் ஐயம் நீங்கிவிடலாய், இவள் என்மகள் போலுதலானே என் கண்ணீர் பெருகுவதுகாண்; அவள் இத்தன்மையளே; நும்மை விருந்தோம்புகிற்பேன்; அதற்குரிய அவள் தந்தையூர் இதுகண்டீர், யான் அவளை யீன்ற தாய்; அவளைப்பற்றி நீயிர் கூறுவீராயின், நுமக்கு அறமுண்டாகுமென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே" (தொல். அகத். 42) என்னும் நூற்பாவின்கண் அமைத்துக்கொள்க.

    
சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து 
    
ஓமை நீடிய கானிடை அத்தம் 
    
முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள்