(து - ம்.) என்பது, பாங்கற்கூட்டத்துக்கண் மறுத்துக்கூறிய பாங்கனைத் தலைமகன் நோக்கிக் குறவன்மகள் கடிய காவலினாலே பெறுதற்கரியளாதலின், நீ அவளைக் கருதுதல் கூடாதென்றோய், எவ்வழியானும் கொல்லியம்பாவை அழியாது வைகுமியல்புபோல என்னெஞ்சினின்று நீங்குவாளல்லளாதலின் யான் யாதுசெய்யவல்லேனென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும,்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.
| மலையுறை குறவன் காதல் மடமகள் |
| பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் |
| சொல்லெதிர் கொள்ளாள் இனையள் அனையோள் |