பக்கம் எண் :


36


    துறை : (2) வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉமாம். உரை இரண்டற்கும் ஒக்கும்.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் யாரையும் அறியேனென்றலும் தலைவி அவனை நோக்கி 'நின் மார்பிலே துஞ்சி இப்பொழுது அவ்வின்பத்தைப் பொருளாய்த் தெருவிடைப் போந்த அப்பரத்தையை யாம் கண்டேம்; அங்ஙனமாக நீ ஏன் வீணாகப் பொய் புகலுகின்றனை'யென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) (1) இதற்குப்,

  
"புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு  
  
 அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி 
  
 இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி 
  
 எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்"     (தொல்-கற்- 6) 

என்னும் விதி கொள்க.

    (இ - ம்.) (2) இனி, இரண்டாவது துறைக்கு, "உணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்" (தொல்-கற். 9) என்னும் விதி கொள்க. அஃதாவது, தோழி ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தளாய் நின்று தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம்போந் தன்மை உண்டாக்கிய தகுதிக்கண் தலைவனுக்கு வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆகும் என்பதாம்.

    
ஐய குறுமகட் கண்டிகும் வைகி  
    
மகிழ்நன் மார்பில் துஞ்சி யவிழிணர்த்  
    
தேம்பாய் மராஅங் கமழுங் கூந்தல் 
    
துளங்கிய லசைவரக் கலிங்கந் துயல்வரச்  
5
செறிதொடி தெளிர்ப்ப வீசி மறுகிற் 
    
பூப்போ லுண்கண் பெயர்ப்ப நோக்கிச் 
    
சென்றனள் வாழிய மடந்தை நுண்பல் 
    
சுணங்கணி வுற்ற விளங்கு பூணள் 
    
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப் 
10
பழம்பிணி வைகிய தோளிணைக்  
    
குழைந்த கோதைக் கொடிமுயங் கலளே. 

    (சொ - ள்.) ஐய மடந்தை மகிழ்நன் தங்கி மார்பில் துஞ்சி ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; தேம் பாய் மராஅம் கமழுங் கூந்தல் துளங்கு இயல் அசைவர - வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடப்ப மரத்தின்விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து