(து - ம்.) என்பது, களவினின்று மணம்புரிந்து கொள்ளக்கருதிய தலைமகன் அது காரணமாகப் பொருளீட்டி வருமாறு பிரிதலும் ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி "என் உயிர்போவதாயினும் சேர்ப்பன் தானேவந்து புணர்ந்து தலையளி செய்ததனாலே இன்னும் வந்து முயங்குவனென்னுங் கருத்தோடு அவன்மீது சிறிதுஞ் சினங் கொள்ளே" னெனத் தனக்குண்டாய வருத்தத்தை உள்ளடக்கிக்கொண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுள் விதியே அமையும்.
| கண்ணுந் தோளுந் தண்நறுங் கதுப்பும் |
| பழநலம் இழந்து பசலை பாய |
| இன்னுயிர் பெரும்பிறி தாயினும் என்னதூஉம் |
| புலவேன் வாழி தோழி சிறுகால் |
5 | அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடற் |
| பெருமீன் கொள்ளுஞ் சிறுகுடிப் பரதவர் |
| கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர் |