(து - ம்.) என்பது, தலைவன் பொருள்கொணருமாறு பிரிதலானே வருந்திய தலைமகளைநெருங்கி நீ வருந்தாதேகொள் வலிதிற்பொறையோடிருவென்ற தோழிக்கு அவள் நம்காதலர் அன்புசெய்திருந்தமையால் நாம்உயிருய்ந்திருந்தேம்; அதனையறியாராய் அவர் அரும்பொருள் விரும்பி அகன்றுபோயினார்: ஆடவர்செய்கை இதுவேயென்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிவர்காணென வருந்தி எதிர்மொழி கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும், ''அவன் அறிவு ஆற்ற அறியும்'' (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண் ''ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை'' என்னும் விதியே கொள்க.
| மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர் |
| உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் |
| பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல் |
| நாந்தம் உண்மையின் உளமே அதனால் |
5 | தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து |
| என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச் |
| சென்றோர் மன்றநங் காதலர் என்னும் |
| இன்ன நிலைமைத் தென்ப |
| என்னோரும் அறிபஇவ் வுலகத் தானே. |
(சொ - ள்.) நல்நுதல் இவ் உலகத்து மாந்தர் மரம் சா மருந்துங் கொள்ளார் - அழகிய நுதலையுடையாய்! இவ்வுலகத்து மாந்தர்