பக்கம் எண் :


401


     இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; தாமம் நல்கு என வேண்டுதும் - அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்! எ - று.

     (வி - ம்.)குளவி - மலைப்பச்சை. பாக்கம் - பக்கத்துள்ளவூர். முணைதல் - வெறுத்தல். மிசைதல் - தின்னுதல். இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வுமறுத்தல்.

    இரவில் வந்து முயங்குங்காறும் ஆற்றியிருத்தலருமையின், முற்பட மாலை நல்குவாயாக வென்றாள்; அதனையணைத்தேனும் ஆற்றலாமாதலின்.

     உள்ளுறை :-யானை ஈரினம் தலைவனும் தலைவியுமெனவும், குழையத் தீண்டியென்றது இயற்கைப் புணர்ச்சியிற் கூடியதெனவும், வாழையை வெறுத்தென்றது களவுப்புணர்ச்சியை வெறுத்ததெனவும், சிறுகுடியலற என்றது பழிச்சொற்கூறும் அயலிலாட்டியர் நடுங்கி அவர் வாயடங்கச் செய்ததெனவும், பலவின் பழமிசையுமென்றது வரைந்துகொண்டு இல்லற நடத்தி இன்பந்துய்ப்பாராகவெனவும் கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) 'காமல் நல்கென' என்றும், 'வீஉக வரிந்த' என்றும் பாடம்.

(232)
  
233. அஞ்சிலாந்தையார்
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக இவள் ஆற்றாள் என்பதுணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் வரைந்து கொள்ளாது களவொழுக்க மேற்கொண்டு நெடுநாள்காறும் வருதலையறிந்த தோழி, இவன் களவின் வருதலை இவள் ஆற்றாளென்பது கொண்டு ஒருநாள் அவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை நோக்கி 'நீ அவன்பால் காதல் மிக்குடையை யாதலின், என்சொல்லை ஏற்றுக்கொள்ளமாட்டாய்; ஆயினும் ஒன்று கூறுவேன் கே'ளென்று தொடங்கி அவன் சான்றோனல்லனாதலை அறிந்து கொள்ளென்று கூறி, உள்ளுறையால் அவள் செய்ய வேண்டுவதனையுஞ் சூழ்ந்து கூறிநிற்பது.

     (இ - ம்.) இதுவுமது.

    
கல்லாக் கடுவன் நடுங்கமுள் எயிற்று 
    
மடமா மந்தி மாணா வன்பறழ் 
    
கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும் 
    
பெருங்கல் நாடனை அருளினை யாயின்  
5
இனியென கொள்ளலை மன்னே கொன்னொன்று