(து - ம்.) என்பது, வரையாமையால் ஆற்றாமை மிக்கு வருந்திய தலைவியைத் தோழி நோக்கி "நீ வலிதிற் பொறுத்திரு" வென்றாட்கு அப்பொழுது தலைமகன் ஒருபுறத்து வந்து மறைந்திருப்பதை யறிந்த தலைவி அவன் கேட்குமாற்றானே தோழியை நோக்கி "எனக்கு நோய் மிக்கது; மெய்யும் வெப்பம் உடைத்து; இனி உய்யேன்; ஒருகால் அவனது மலையிலே பட்ட காற்று என்மெய்யைத் தீண்டினால் உய்வேனாதலின், அது படும்பொருட்டு அன்னையிடஞ் சென்று 'என்னை முன்றிலிலே போகட்டாலுய்வேன்' என்று சொல்"லென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்பதனைத் 'தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்" என்னும் தந்திரவுத்தியாகக் கொண்டு அதன்கண் அமைத்துக் கொள்க.
| நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந் |
| தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே |
| ஒய்யெனச் சிறிதாங்கு உயரிய பையென |
| முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென |
5 | நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண்டு |
| உரையினி வாழி தோழி புரையில் |
| நுண்ணேர் எல்வளை நெகிழ்த்தோன் குன்றத்து |
| அண்ணல் நெடுவரை ஆடித் தண்ணென |