(து - ம்.) என்பது, வினைவயிற் சென்று மீளுந் தலைமகன் தலைமகளைக் காணும் அவாவினால் விரைவிலே தேர்செலுத்த வேண்டிப் பாகனை நோக்கிப் "பாகனே! மழைபெய்யத் தொடங்கியதுமன்; இவ்வேலை தன் குட்டியோடு களரின் கண்ணே சென்ற பிணைமானை அதன் கலைமான் தேடா நின்றது உவ்விடத்தே பாராய்; ஆதலின் நின்தேர் விரைந்து செல்வதாக"வென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் |
| புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் |
| பான்னெனக் கொன்றை மலர மணியெனப் |
| பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் |
5 | கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து |
| செல்க பாகநின் தேரே உவக்காண் |